Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
24 décembre 2006

மரண தண்டனை தீர்வல்ல...

file_225951_569797_vignette_une_1_

டிசம்பர் 30 ஆம் திகதி 2006 இல் காலை 8 மணி 55 நிமிட நேரத்தில் சதாம் ஊசேன் தூக்கிலிடப்ப்டார். வயது 69. 1979 இல் இருந்து 2003 இல்@ அமரிக்க இராணுவத்தால் கைது செய்யப்படும் வரை ஈராக்கில் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வந்தவர். இவரது சர்வாதிகார ஆட்சியில் ஈராக்கில் வாழும் சிட் இனமக்களும், குர்திஸ் இன மக்களும் மிகம் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியவர்கள். 1988இல் குர்திஸ் இன மக்கள் மீது விசவாய்வை பிரயோகித்து பல்லாயிரக் கணக்கான மக்களை கொலை செயயக் காரணமானவர். 148 சிட் இன மக்களை 1982 இல் கொலை செய்ததற்காகவே இவருக்கான மரண தண்டனை எனக் கூறப்படுகிறது. ஆனால் இவரது கொலைகளின் அளவுகளோ மிக நீளமானதும், கொடூரமானதுமாகும். இதில் அவரது உறவினர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் அடங்குவர். இவருக்கான மரண தண்டனைத் தீர்ப்பானது 2006 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி வழங்கப்பட்டது. இவரது மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்ட பின்பே தூக்கிலடப்பட்டார்.

இது மனித விரோத நடவடிக்கைக்கான தண்டனையாக உலகத் தலைமை நாடான அமரிக்காவால் கூறப்படுகிறது. 140 000 ஆயிரம் அமரிக்க இராணுவத்தை ஈராக்கில் எப்படி நிர்வகிப்பதென்றும் எப்படி அவர்களை வெளியேற்றுவது என்பதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே ஜோர்ஜ் புஸ் திண்டாடுகிறார். இன்று ஈராக்கில் கொலை செய்யப்படும் அப்பாவி மக்களுக்கு யார் நியாயம் வழங்குவது!! அக்கொலைக் குற்றத்திற்காக  யாரைத் தூக்கிலிடுவது? யாரை நீதிபதியாக்குவது? ஜோர்ஜ் புஸ் அவர்கள் பேசுகிற ஜனநாயகக் கருத்தானது வினோதமானதே.

பல ஜரோப்பிய நாடுகள் சதாம் ஹீசைன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை கண்டிக்கவே செய்கிறது. இவ்வாறான தண்டனை முறைகளானதும் மனித விரோத செயல்களிலிருந்து மாறுபட்ட ஒன்றல்ல என்பதாக மனித உரிமை அமைப்புகளும் சதாம் ஊசேனிற்கு கொடுத்த மரண  தண்டனையை கண்டிக்கவே செய்கிறது. நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவரை காட்டப்பட்டதே அல்லாது!! தீர்ப்பு வழங்கியது அமரிக்க அதிகாரம் என்பதை அரசியல் அவதானிகளால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

ஒரு மனிதனின் தவறுகளுக்கான அடிப்படைக் காரணியாக சம்மந்தப்பட்ட நபரே நூறு வீதம் உடந்தையாகக் கொள்ள முடியாதென்பதை உயிரியல் நிபுணர்கள் ஊர்ஜிதப்படுத்தியும் வருகின்றனர். ஹிட்லரின் நடவடிக்கைக்கு பெரும் பங்களிப்பும் தார்மீக ஆதரவும் ஜேர்மனிய சமூகத்தின் மீதான விருப்புடன் சம்மந்தப்பட்டதாக நிரூபித்தும் காட்டியுள்ளனர்.

எமது பாசிச நாயகனான பிரபாகரனுக்கான தார்மீகத் தூண்டுகோலாய் இயங்குவதும் எமது சமூக உணர்வு நிலை என்பதை நாம் கூறினால் எம் மீது பலர் முகம் சுழிக்கக் கூடும். எமது இந்து மதமும் அதனைத் தாங்கி நிற்கும் பகவத் கீதையின் கருத்தியலே எமது சமூகத்துள் ஆழ வேரூன்றி தாங்கி நிற்பதை நாம் காணத் தவறுகிறோம்.

எத்தவறாயினும் அதற்கு மரணதண்டனை தீர்வாக முடியாது. மரண தண்டனையும் ஒரு மனித விரோத நடவடிக்கை என்பதை  நாம் கூறிக்கொள்ள வரும்புகிறோம்.

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité