Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
2 septembre 2007

நரபலி

name_thalit

இவற்றை ஏன் நாம் இன்று நினைவூட்டக் காரணமானோம்?

வன்னியில் பலவந்தமாக புலிகளால் கொண்டு செல்லப்பட்ட தலித் இளைஞர் ஒருவருக்கு நிகழ்நத சம்பவமே எம்மை இதை நினைவூட் நிர்ப்பந்தித்தது. குணராஜா எனும் பெயர் கொண்ட தலித் இளைஞர் புலிகளால் கடத்தப்பட்டு ‘படைவேலன்’ என புலிகளால் பெயர் மாற்றப்பட்டுப்  பின்பு   அந்த அப்பாவித் தலிததின் உயிர் தாம் பெறப்போகும தமிழீழத்திற்கென  நரபிலி கொடுக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை 'ஈழநாசம் இணையத்தின்' மூலமாக அறிந்துகொண்டோம்; அதன் விபரத்தைக் கீழே காணவும்.


நன்றி
ஈழநாசம் இணையத்தளம்

இரும்புத்திரைக்கு அப்பால்
ஒரு இருண்ட சிறை!......

வன்னிக்குள் இருந்து
வெளிவராத உண்மைகள்.....

எங்கள் முகங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?....

எங்கள் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா?......

இப்படித்ததான் வன்னியில் புலிகளின் அதிகாரப்பிடிக்குள் சிக்குண்டு திறந்த வெளிச்சிறைக்குள் வாழும் ஒவ்வொரு தமிழ் பிரiஐகளும் கேட்கின்றார்கள்....

இலங்கைப்பணிப்பெண் இஸ்லாமிய சகோதரி றிஷானாவின் உயிரை காப்பாற்றுங்கள் என்று எல்லோரும் திரண்டு நின்று இன்று குரல் கொடுக்கின்றார்கள்.

அந்த ஒரு உயிருக்காக குரல் கொடுக்கும் மனித நேய அமைப்புகள், அரசியல் கட்சிகள், மற்றும் ஊடகங்கள் ஆகியன இன்று கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் 60000 அறுபதினாயிரம் மனித உயிர்களுக்காக குரல் கொடுக்க முன்வருவார்களா?....

யார் இந்த அறுபதினாயிரம் மனித உயிர்கள்?.....

முள்ளியவளையில் அண்மையில் ஒரு மரணச்சடங்கு நிகழ்ந்தது.... இருபது வயது இளைஞன் அவன்... பெயர் செல்லத்தம்பி குணராஜா

அண்மையில் பெரியதம்பனையில் நடத்த இலங்கை அரச படையுடனான மோதலின் போது இவன் கொல்லப்பட்டவன். இவன் புலிகளால் பலாத்காரமாக பிடித்துச்செல்லப்பட்ட ஒருவன்.

ஒரு நாள் வெள்ளை வான் ஒன்று வந்து அந்த வீட்டு வாசலில் நின்றது. வெள்ளை வான் என்றதும் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசம் என்று யாரும் நினைத்து விடுவார்கள்.

வெள்ளை வானில் வந்து கடத்திக்கொண்டு போகிறார்கள் என்று புலிகளின் ஊடகங்கள் அழுது வடிக்கின்றன. ஆனால் வன்னிக்குள் புலிகளின் கட்டுப்பாட்டு பிர தேசங்களில் உண்மையாகவே வெள்ளை வான்கள் ஓடித்திரிகின்றன.

வெள்ளை வானில் வருபவர்கள் புலிகள். தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்கப்போவதாக கூறும் புலிகள் வெள்ளை வானில் வந்து என்ன செய்தார்கள் தெரியுமா?...

செல்லத்தம்பி குணராஐh என்ற 20 வயது இளைஞனின் வீட்டை சுற்றி வளைத்து அந்த இளைஞனை பிடித்துக்கொண்டு போனார்கள்.

போனவன் மூன்று நாட்களில் திரும்பி வந்தான். மீண்டும் புலிகளிடம் போக வேண்டும், போகாவிட்டால் என்னையும் சுட்டு உங்களையும் சுட்டுப்போடுவார்கள் என்று தனது வீட்டுக்டுக்காரர்களுக்கு குணராஜா கூறினான்.

இரண்டு நாட்கள் மட்டும் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் புலிகளுக்கு பயந்து அவன் புலிகளிடம் சென்றான்.

பெரிய தம்பனையில் புலிகளுக்கும் அரச படையினருக்கும் மோதல் நடந்து அடுத்த நாள் ஒரு இரவு! அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு வாகனம். அது புலிகளின் வாகனம்.

பிடித்துக்கொண்டு போவதற்கு அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை. வீட்டுக்கொருவர் புலிப்பயிற்சிக்கு வர வேண்டும் என்று கூறித்தான் பலாத்தகாரமாக குணராஜாவை பிடித்து சென்றார்கள் புலிகள்.

பிறகெதற்கு மீண்டும் வெள்ளை வானின் வந்து நிற்கிறார்கள் என்று எட்டிப்பார்த்தனர் அந்த வீட்டுக்காரர்கள். வாகனத்தில் இருந்து முதலில் இறங்கினார் ஒருவர். அவர் முன்னியவளை அரசியல் பொறுப்பாளர்! பெயர் போசன்!

அம்மா!.... உங்கள் பிள்ளை மாவீரர் ஆகி விட்டார்....... என்றதுதான் தாமதம் விட்டில் இருந்தவர்கள் எல்லோரும் தலையில் அடித்து.... நிலத்தில் விழுந்து.... ஐயோ.... ஐயோ.... என்று கூக்குரல் இட்டு குளறத்தொடங்கி விட்டார்கள்.

என்ரை பிள்ளையை வில்லங்கமாக பிடித்துக்கொண்டு போய் பலி கொடுத்துப்போட்டு வந்து நிற்கிறியளே..... என்று புலிகளை திட்டித்தீர்த்துக்கொண்டே தலை தலையாக அடித்து அழுது புரண்டனர் குணராஜாவின் வீட்டுக்காரர்கள்.

பாவம் அந்த குடும்பத்தவர்கள். சீவல் தொழில் செய்து, செய்யும் தொழில் வருமானத்தில் புலிகளுக்கு கட்டாய வரியும் கொடுத்து மிச்சத்தில் வாழ்க்கை நடத்தும் அப்பாவி குடும்பத்தினர்.

பெற்ற வயிறுகளுக்குத்தான் தெரியும் பிள்ளைகளை பலி கொடுத்த வலியின் வேதனை. தன் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்கும் பிரபாகரன் குடும்பத்திற்கு இந்த வலி தெரியாது.

குணராஜாவிற்கு புலிகள் இட்ட இயக்கப்பெயர் 'படைவேலன்'.

படை வேலனின் உடலத்தை கொண்டுவந்திருக்கின்றோம். உங்கள் கடமைகளை செய்து விட்டு எங்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொண்டு வந்து படை வேலனின் உடலத்தை புதைத்து விடுங்கள் என்றார் புலிகளின் முள்ளியவளை அரசியல் பொறுபடபாளர் போசன்.

குணராஐhவின் குடும்பத்தினர் கூக்குரல் இட்டு கதறியழ..... தன்  சகோதரனின் இழப்பு செய்தியில் துடி துடித்து போயிருந்தார் குணராஐhவின் அண்ணர்.

புலிகளின் முள்ளிய வளை அரிசியல் பொறுப்பாளர் போசனபை;பாரத்து.....

எங்கையடா என் தம்பி?...... என்று கேட்டு உணர்ச்சி வேகத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் போசன் மீது ஏறிப்பாய்ந்தார்.

போசனுக்கு என்ன செய்வதென்றே தெரியாது..... குணராஐhவின் அண்ணன் புலிப்போசன் மீது தாக்குதல் நடத்து தொடங்கினார்.

அடி உதை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓடினார் புலிகளின் முன்னியவளை அரிசியல் போசன்.

குணராஐhவின் சடலத்தின் மீது அழுது புரண்டு மரணச்சடங்கு நடத்தினார்கள் அவரது பெற்றோர்கள்!

நையப்புடைக்கப்பட்ட போசன் தப்பியோடிப்போய் புலிகளிடம் நடந்ததை கூறினார்.
மறு நாள் ஆயுதங்களுடன் வந்திறங்கினார்கள் புலிகள்!

பிறகு என்ன நடந்தது?........

திறந்த வெளிச்சிறையின்
இருண்டயுக கைதிகளின்
வன்னி அவலங்கள் தொடரும்……

ஊடறுப்பான்!

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité