Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
31 mars 2007

‘’தத்துவவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத


’தத்துவவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு குருடனைப் போன்றவன் என்று தத்துவவாதியை, இறையியல்வாதி குற்றம் சாட்டுகிறார். ஆனால் இறையியல் வாதி யோ, மதவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையை தான் பார்த்ததாகக் கூறி அதை எதிர்பார்த்திருக்கும் ஒரு குறுடனைப் போன்றவன் எனக் குற்றம் சாட்டுகிறார்.’’ (அம்பேத்கர்)


பிரான்சில் பரபரப்பான செய்தி

''இறந்த போப்பாண்டவரின் அருள்கிடைக்கப்பெற்று
தனது தீராத நோயிலிருந்து மீண்ட
சிஸ்டர் சிமொன் பியர்''

ஒரு காலத்தில் மனித அறிவின் அனைத்துக் களங்களையும் மதமே நிர்வகித்துவந்தது. காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து இன்றைய வரையான மனித சமூகத்தின் அக உணர்வுகளை (உளவியல்சார்ந்த) மதங்களின் மரபியலான வளர்ச்சிப் போக்கே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

காலத்தையும,; வெளியையும் விளக்க முற்பட்ட அறிஞர்களில் பூமி உருண்டை வடிவமானதென நிரூபித்தவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த அரிஸ்ட்டாட்டில். (கிமு 340) பிற்பாடு தலாமி எனும் அறிஞரே (கிபி.200) முதல் முதலாக அண்டவியல் மாதிரியை வரைந்தவர். இவர்கள் இருவருமே ஆன்மீக (கடவுள் செயல்) நம்பிக்கையின் ஊடாகவே பிரபஞ்சத்தை விளக்க முயன்றவர்கள். இவர்களின் தீர்மானத்தின்படி அண்டத்தில் பூமி நிலையானதெனவும் பூமியை சுற்றியே சூரியன் உட்பட பிற கோள்கள் யாவும் சுற்றிவருவதாகவும் கருதியவர்கள்.இதில் குறிப்பாக அறிஞர் தலாமியின் கருத்தானது வேதாகமத்தின் சிந்தனைப் போக்கிற்கு ஒத்துப் போகின்ற நிலையால், கிருஸ்தவ சபையானது தலாமியை புகழ்ந்து சிறப்பித்தது.

1514 இல் நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ் எனும் போலந்து நாட்டைச்சேர்ந்த பாதிரியார் அரிஸ்டாட்டில், தலாமி போன்றவர்களின் கண்டுபிடிப்புக்கு மாறாக சூரியனே நிலையானதெனவும் சூரியனைச் சுற்றியே பூமி உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றி வருகிறது எனக் கருதினார். இருப்பினும் தனது கண்டுபிடிப்பை வெளிப்படுத்துவதற்கு அஞ்சினார். காரணம் திருச்சபைகளின் கடும் தண்டனைக்கு தான் உட்பட நேரிடும் என்பதற்காகவே. இருப்பினும் தனது கண்டுபிடிப்பை தனது பெயரை வெளியிடாது பொதுச்சுற்றுக்கு விட்டார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தின் பிற்பாடு இரு வானவியலாளர்களான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜொஹன்னஸ் கெப்னர் என்பவரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ கலிலி என்பவருமே கோப்பர் நிக்கசின் கோட் பாட்டை பகிரங்கமாக ஆதரித்தார்கள்.

மதப்பேரரசுகள் படிப்படியாகத் தகர்ந்தது. கோப்பர் நிக்கசின் புரட்சியானது வானவியலை மதத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தது. டார்வினின் புரட்சியானது உயிரியலையும் புவியிலையும் மதத்தின் பிடியிலிருந்து விடுவித்தது. இருந்த போதிலும் மேற்குலகு உட்பட இன்றுவரை மருத்துவத்தை இறையியல் ஆதிக்கத்திலிருந்து முற்றாக விடுவிக்க  முடியவில்லை.

இதற்கு 31-03-2007 அன்று பிரான்சில் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஓர் தகவல் சான்றாக அமைந்துள்ளது. பிரான்சிலுள்ள  Aix en Provence  எனும் இடத்திலுள்ள தேவாலயத்தில் பணிபுரிந்த சிஸ்டர் மேரி சிமோன் பியர் என்பவரின் வாக்குமூலமே ஊடகங்களால் பர பரப்பாக்கப்பட்டது. செய்தியின் தலைப்பாக: ‘’இறந்த இரண்டாவது போப்பாண்டவரின் தெய்வீகத்தன்மை வாய்ந்த செயலினால் தீராத நோயினால் பீடிக்கப்பட்டிருந்த சிஸ்டர் மேரி சிமோன் பியர் முற்றாக குணமடைந்த அற்புத நிகழ்வு’’ என்பதாகும். (le monde 31/03/2007)

கடந்த 2002 ஆம் ஆண்டிலிருண்து  PARKINSON எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சிஸ்டர் மேரி சிமோன் பியர் தனது வெண் நிற ஆடையில் முகப்பரப் பெங்கும் புன் முறுவல் பரவ  தான் தீராத நோயினால் பல காலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இறந்த போப்பாண்டவரின் ஆன்மீக, தெய்வீக ஆளுமையுமே தான் குணமடையக் காரணமா அமைந்தது என தொலைக்காட்சி செய்தியினூடாத் தெரிவித்தார். மே மாதம் 2006 ஆண்டு இதுபற்றிய செய்தி மத பிரச்சாரங்கள் செய்துவரும் இணையங்களில் வெளிவந்திருந்தது இருந்த போதிலும் கடந்த 31 ஆம் திகதியே அனைத்து ஊடகங்களிலும்  தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய முதல் விசாரணை செய்த பிரான்சிலுள்ள கத்தோலிக்க குருவான பியர் லுக் மரி லலன் இது பற்றி தெரிவிக்கையில் சிஸ்டர் மேரி சிமோன் பியர் குணமடைந்திருப்து உண்மையே என்றும், இதற்கு இறந்த போப்பாண்டவரின் ஆன்மீக ஆசியே காரணமாக அமைந்தது என்பதை தற்போதைய போப்பாண்டவரே உறுதிப்படுத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார். எனவே இதற்கான இறுதி விசாரணைக்காக சிஸ்டர் மேரி சிமோன் பியர் இத்தாலி செல்ல இருக்கிறார்.

தனது உடல் நிலையில் ஏற்பட்ட தெய்வீக மாற்றம் பற்றி சிஸ்டர் மேரி சிமோன் பியர் தெரிவிக்கையில். இரண்டாவது போப்பாண்டவர் இறந்த ஏப்ரல் 2 ஆம் திகதி 2005 இல் இருந்து தனது உடல் நிலையில் மிக மாறுதல் ஏற்பட்டதாகவும் நாளொரு வண்ணம் தனது பார்வையில் குறைபாடு நிகழ்வதும், தன்னால் எதுவும் எழுத முடியாது போனதாகவும், இதனால் தனது இறையியல் பணியிலிருந்து தான் விலகிட வேண்டுமெனவும் தீர்மானித்த வேளையில், தனது மேலதிகாரி ஓர் நாள்  அவரிடம் சென்று இரண்டாவது போப்பாண்டவரின் பெயரை எழுதும்படி கூறியபோது தான் அதை எழுதியதாகவும், அவ்வெழுத்து பிறர் புரியாதபடி அமைந்திருந்ததாகவும் பிற்பாடு தான் தனது அறைக்கு சென்ற போது ; அன்றிரவு ஏதோ ஓர் உள்  உணர்வும் சக்தியும் தன்னை பேனை எடுத்து எழுதும்படி தூண்டியதாகவும், அதன் நிமித்தம் தான் பேனை எடுத்து எழுதியபோது; ''என்ன ஆச்சரியம் எனது எழுத்து மிகப்பிரகாசமாகவும் புரியும்படியாகவும் இருந்த து   பின்பு எனது உடல் நிலையிலும் திடீரென நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு பூரண குணமாகிவிட்டேன். அதன் பிற்பாடு PARKINSON வியாதிக்காக நான் உபயோகித்து வந்த மருந்துகளையும் நிறுத்திவிட்டேன்.'' என்பதாக மேற்கண்ட விபரங்களை சிஸ்டர் சிமோன் பியர் தெரிவித்தார்.

இதைக்கேட்டதும்!! அறிந்ததும்!! நான் பர பரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டேன். ஓடினேன், தேடினேன்...என்ன இந்த  PARKINSON வியாதி!!!   parkinson james என்பவர் லண்டனைச்சேர்ந்த வைத்தியர் (1755-1824) இவர் நரம்பு மண்டலங்களின் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் பற்றிய ஆய்விற்கு காரணமானவர். இந்நோயின் பக்க விளைவுகளையும, அது எப்படி நிகழ்கிறதென்பதையும் கண்டுபிடித்த காரணத்தாலுமே இவ்வாறான நோய் உள்ளவர்களை  parkinson  வியாதி என பிரான்சில் பேசப்படுகிறது. இவ்வியாதியின் அறிகுறியாக முதலில் உடல் எங்கும் நடுக்கம் ஏற்படுவதாகவும் அதில் ஆரம்பித்து பார்வையும் குறைய ஆரம்பிக்கும். இதனால் நரம்புகளின்  செயல் பாட்டு  மையமான மூளையிலும் பாதிப்புகள் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. இவ்வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக நித்திரை கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தினால் அவ்வியாதியினை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமெனக் கூறப்படுகிறது.

இவ்வாறான அதிசய-தெய்வீக-அற்புத செய்திகளால் மேற்குலகில் சமூகமட்டத்தில் சிந்தனைச் சிதைவுகள் ஏற்படுவதில்லை. காரணம் மேற்குலகில் சிந்தனை மாற்றத்தின் பிற்பாடே சமூகமானது மாற்றமடைந்தது. ஆனால் எமது இந்து சமூகமானது சிந்தனையில் மாற்றம் காணாது  அதிகாரத்திற்காக நவீன சமூகமென ஒன்றை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து இருத்தியுள்ளது. இதற்கான மிகப்பெரிய பாதகத்தை விளைவித்த பொறுப்பு மிஸ்டர் காந்திக்கும் (மகாத்மா) உண்டு ( இது பற்றி விலா வாரியாக எழுத நினைத்துள்ளேன்)

எமது இந்து சமூக வரலாற்றில் மேற்குறிப்பிட்  parkinson வியாதிக்குள்ளான ஒருவரை கடவுளாக்கிய வரலாறு ஒன்று உண்டு. மேற்கு வங்காளத்திலுள்ள கமர்புகார் என்ற கிராமத்தில் 1836 ஆம் ஆண்டு பெப்ரவரி பதினேழாம் திகதி ஒரு ஏழைப் பார்ப்பனக் குடும்பத்தில் கடாதர் சட்டோபாத்தியாயா என்பவர் பிறந்தார். இவருக்கு பள்ளிக்கூடம் என்றாலே பேதி போய்விடும.; வாழ்நாள் முழுவதும் கல்வி வாசனை அற்றவராகவே இருந்தார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே மன வளர்ச்சி குறைவு, மற்றும் முளைச் சீர்குலைவு சம்பந்தப்பட்ட உளவியல் நோய்ப் பாதிப்பால் கடாதர் சட்டோபாத்தியாயா துன்பப்பட்டார். சிறிய அளிவலான உணர்ச்சி வயப்படும் சூழலில் அவர் சொரணையின்றி கீழே விழுந்துவிடுவார். அதனால் ஏற்படும் மனப்பிறழ்வினாலும் உணர்வு மருட்சியினாலும் காணாத காட்சிகளை காணத் துவங்கிவிடுவார். இவ்வியாதி இவருக்கு மரபு வழித்தொடர்பால் ஏற்பட்டது. இவரது தந்தையின் சகோதரியான ராம்சீலாவிற்கும் இதுபோல் நடந்து வந்தது. இதனால் இவருக்கு சீத்தள தேவியின் ஆவி பிடித்திருப்பதாக முடிவு செய்யப்பட்டது. தீராத வியாதியினாலும் வறுமையின் பிடியில் வேலையின்றி சுற்றித் திரிந்த கடாதர்  அவரது தமயனார் அர்ச்சகராக இருந்த கல்கத்தாவிற்கு அருகில் உள்ள தனேஸ்வரம் என்ற ஊரில் குடியேறினார். பிற்பாடு அவரது அண்ணன் இறந்துவிட அர்ச்சகர் வேலை அவருக்குக் கிடைத்தது. இதனால் பேரும் புகழும் பெறவேண்டும் என்ற பேராசை கடாதரை ஆட்டிப்படைத்தது. கடாதருக்கு கல்வி வாசனையே கிடையாது. அதனால் அறிவு வளர்ச்சி என்பது அறவேயில்லை. எனவே பார்ப்பனத் தகுதியும் குறைவாகவே இருந்தது. அனைத்தையும் ஈடுகட்டுவதற்கு ஆழ்ந்த ஆத்திகனாக மாறத் தொடங்கினார். முதல் வேலையாக கேனராம் பட்டாச்சாரி எனும் பார்ப்பனரிடம் புரோகிதத்திற்கு தேவையான மந்திரங்களைக் கற்றுக் கொண்டார்.
புரோகிதராகிவிட்ட கடாதர் சிலை வழிபாட்டில் மூழ்கினார். ஆலயவளாகத்தில் முழுப் பயித்தியம் போன்று அழுவார், ஆடுவார், பாடுவார், (முளை விசருக்கு இந்த அத்தாட்சி போதாதா!!) உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உணர்விழப்பதும் சோரணையற்றுப்போவதும் உடம்பு வெட்டி வெட்டி இழுப்பதும் அவரது அன்றாட வியாதியாக இருந்தது. ‘’நான் தியானத்தில் ஆழ்ந்திருப்பேன். என்னுடைய உடம்பிலிருந்து ஒரு சந்நியாசி கையில் திரிசூலத்தோடு வெளியே வருவார். உலகிலுள்ள அனைத்தையும் புறக்கணித்துவிட்டு கடவிளிடமே மனத்தைச் செலுத்தும்படி என்னிடம் கூறுவார். நான் மறுத்தால் சூலாயுதம் கொண்டு என்னைக் குத்தி விடுவதாக அசசுறுத்துவார்...திடுக்கிட்டு எழுந்தேன். கண்களில் நீர்  பொங்க காளியிடம் வேண்டினேன்’’ என்பார். காளியை வழிபட வேண்டும் என்ற அவரது உள்மனத் தூண்டுதல் அவரைப் பைத்தியமாக ஆட்டிப்படைத்தது. அதற்கு வலுவானதோர் உளவியல் அடிப்படை உள்ளது.

கடாதருடைய உளவியல் பிரச்சனைகளை விரிவாக ஆராய்ந்த நிரஞ்சன் தர் கூறுகிறார். ‘’கடாதர் சிறுவனாக இருக்கும்பொழுது பாலியல் உணர்வுகளில் அளவு கடந்த ஆர்வம் உள்ளவனாக இருந்தான். ஊரிலுள்ள ஏரியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் சென்று குளிப்பதே அவரது வழக்கமாக இருந்தது. பெண்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.  எனவே மரத்திற்கு பின்னால் மறைந்து கொண்டு பெண்கள் குளிப்பதை ஆர்வமுடன் உற்றுநோக்கத் தொடங்கினார். பெண்கள் அவரது தாயாரிடம் முறையிட்டனர். எனவே அவர் கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். இது போன்ற பல நிகழ்வுகள் கடாதர் மனதில் குற்ற உணர்வைக் கிளறியிருக்கலாம். இக்குற்ற உணர்வு இளம்பருவ ஆண்மகனின் நரம்பு மண்டலத்தில் சலனத்தையும், படபடப்பான மனநிலையையும் உருவாக்கியிருக்க வேண்டும.; அத்தோடு அந்த வயது, பாலின உறுப்புகளின் வளர்ச்சிக் காலமனதால் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட கனமான அழுத்தமும் சேர்ந்து கொள்ள, அதன் விளைவால் திட்டவட்டமான பண்பு உருவாகாத நிலையும், மூளையின் மறு சீரமைப்பும் நடைபெற்றது.’’

கடாதரின் தீவிர தேவி வழிபாட்டிற்கான காரணத்தையும் நிரஞ்சன் தர் விபரமாக விளக்குகிறார்.‘’கடாதர் பாலின உணர்வுகளால் அலைக்கழிப்புக்கு உள்ளான மனிதன். அவரைப் பொறுத்தவரையில் தாய் என்ற மனப்பதிவு, தன்னுணர்வின்றியே, பாலுணர்வுத் தூண்டுதல்களை மட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்ட, தன்னியல்பாக நடக்கும் உள்ளுறுப்பு இயக்கம். அதன் காரணமாகத்தான் அவரது மனைவி சாரதாமணி உட்பட பெண்கள் அனைவரையும் தாயாகவே பார்த்தார். அவரது ஆழ்மனத்தின்  உணர்ச்சிமயமான வாழ்வில், இணக்கமற்ற உணர்வுகளுக்கு இணங்கச் செய்யும் தூண்டுதல்கள் வலுவானவையாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவை போன்ற தூண்டுதல்களின் அழுத்தம் மிகுதியானதால் தூய்மையாதல் என்ற உணர்வு மேலோங்கி நின்றது.’’

ராணி ரஷ்மோனியும் கோவில் பொறுப்பாளரான அவரது மருமகனும் கடாதரின் இயற்கைக்கு மாறான பாலுணர்வைக்கண்டு கொண்டனர். எனவே இரண்டு அழகிய விலை மாதர்களை அவரிடம் அழைத்துவந்தனர். கடாதர் வெறுப்போடு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

கடாதருக்கு இருபத்திமூன்று வயதாகியது. ஒரு கணவனுக்கு உண்டான கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்திருந்தார். அவருக்குத் திருமணம் செய்வித்தாலாவது அவரது நோய் குணமாகாதா என்று அவரது தாயார் நினைத்தார். கடாதர் முழுமனத்துடன் உடன் பட்ட பின்னர் 1859 ஆம் ஆண்டு அவருக்கும் ஐந்தே வயதான சாரதாமணி (1854-1920) என்ற பெண் குழந்தைக்கும் திருமணம் நடந்தேறியது.

கடாதர் காளிதேவியைத்தான் வழிபாடு செய்துகொண்டிருந்தார். ஆயினும் தனது சமய நம்பிக்கைகளில் முரண்பாடுகளும் நிலை திரிதல்களுமாக ஆட்டம் காண்பித்தார். கீதைக் கற்பிதங்களின் உண்மையான உருவாக்கம் தானே என்று அறிவிக்கலானார். இந்த அறிவிப்பு ஆரவாரமான மதிப்பைப் பெற்றுத் தந்தது. இதே கேலிக்கூத்தின் உச்சக்கட்டம்!! மூளைக் குழப்ப வியாதியால் பைத்தியமாகிவிட்ட கடாதரின் பூர்வாசிரமப் பெயர் மாற்றப்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாமம் சூட்டப்பட்டு இந்துப் பரிவாரங்களுடன் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைக்கப்பட்டார். அவரே கூறுகிறார். ’’இறுதியில் தேவியின் ஆணை எனக்கு அருளப்பட்டு விட்டது. மானுடம் பயன் பெறுவதற்காக உணர்ச்சிகளை மட்டுப் படுத்திக்கொள்’’ என்பார். மதப் பைத்தியம் பிடித்த மக்கள், கடாதரை வேடிக்கை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக தானேஸ்வரம் தேடிச் சென்றார்கள். படித்த இளைஞர்கள்கூட, விவேகானந்தராக பரிணாமம் அடையப்போகும் நரேந்திர தத்தா உட்பட குருவின் காலடியில் அமர்ந்து ஆத்ம தரிசனம் அடைந்தார்கள்.

புற்றுநோயால் அவதிப்பட்ட ராமகிருஷ்ண மரமஹம்சர் மரணப்படுக்கையில் கிடந்தார். தனது யோக சக்தியைப் பயன்படுத்தி நோயின் பிடியிலிருந்தும் வேதனையிலிருந்தும் மீண்டுகொள்ளுமாறு நரேந்திர விவேகானந்தர் உட்பட அவரது சீடர்கள் அவரை வேண்டினார்கள். இதனால் எரிச்சல் உற்ற ராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பொழிப்புரை ஒன்றை எரிச்சலுடன் எடுத்தோதினார். ’’ நான் இவ்வாறு வேதனையில் அவதியுறுவது தலைவிதியா என்ன? நோயிலிருந்து விடுபடவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால் தேவி திருவுளம் பற்றினாலன்றோ எனது நோய் தீர முடியும்’’ என்றார். தான் வெறும் பைத்தியம் என்பதற்கு மேல் தன்னிடம் எந்த சக்தியும் இல்லை என்பதை ராமகிருஷ்ணர் ஏற்றுக்கொண்டார். நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்று ராமகிருஷ்ணர் தணியாத தாகம் கொண்டிருந்தார். ஆனால் புற்று நோயின் கொடுமையால் நீண்டகாலமாக இழுபறியில் தத்தளித்த அவர் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதினாறாம் திகதி இறந்தார்.  மிகுதியான யோக சக்திகள் அருளப்பெற்ற வராக நம்பப்பட்ட அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்ற யோக சக்தி கை கொடுக்கவிலை.

இவருக்கு இருந்த வியாதிதான் தற்போது பிரான்சில் பேசப்படுகின்ற PARKINSON  வியாதியும்.

அசுரா

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité