Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
15 décembre 2006

சதி வழக்கம்

sathi

   இது உலகப் புகழ் பெற்ற காண்டீவம். இதற்கு தங்கக் கவசம் உண்டு. இது எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் சிறந்தது. லட்சம் ஆயுதங்களுக்கு சமமானது, சக்தியுடையது. இந்த வில்லின் உதவியால்தான் தேவர்களையும், மனிதர்களையும் வென்றார். இது விஷித்திரமானது. பல வர்ணங்கள் கொண்டது. அற்புதமானது. மிருதுவானது. ஒரு பனைமரத்தளவு உயரத்திற்கும் பெரியது. இதை தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் வெகுகாலம் பூஜித்திருக்கிறார்கள். இந்தச் சிறப்பான, தெய்வீகமான காண்டீவத்தை (வில்லை) பரமதேவன் ஆயிரம் வருஷங்களும், ப்ரஜாபதி ஐநூறு வருஷங்களும், இந்திரன் எண்பத்தைந்து வருஷங்களும், சந்திரன் ஐநூறு வருஷங்களும் வருணதேவன் நாநூறு வருஷங்களும் பிரயோகித்துவந்தனர்.

காண்டவ வனத்தை எரித்து  அக்கினிதேவர்களுக்கு சமர்ப்பித்தபோது, அக்கினி பகவான,; வர்ணன் மூலமாக கொடுக்கப்பட்ட  காண்டீவம்…!!!! ‘’கையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது, மேலும் சருமத்திலும் மிகவும் எரிச்சல் உண்டாகிறது. எனது மனம் குழப்பம் அடைவதுபோல் உள்ளது. ஆகவே நான் நிற்பதற்குக்கூட இயலாதவனாக இருக்கிறேன.’’; என்று கூறி அர்சுனன் ‘குருஷேத்திரத்தில்’ முரண்டு பிடித்துக் குந்தி விட்டான்.

krishna

‘’யார் இவர்கள,; என் முன்னால் நிற்கும் எதிரிகள்? குரு, பெரியப்பா, சிற்றப்பா, அவ்விதமே பாட்டனார்கள், அம்மான்கள், பேரர்கள், மைத்துணர்கள், மறு;றும் இரத்த உறவினர்கள்! இவர்களுடனா நாம் போரிடுவது!! இவர்களையா நாம் கொல்லத் துணிவது?.

துரியோதனாதியோர் மிகவும் கொடியவர்கள்,முறையற்றவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு இது பெரிய விஷயம் அல்ல.  பேராசை பிடித்தவர்களுக்கு மனதில் விவேகம் அழிந்துவிடும். அதனால் ‘குலநாசத்தினால்’ என்னவெல்லாம்-தீய விளைவுகள் ஏற்படும் என்று எண்ணிப் பார்க்கமாட்டார்கள். அதிகாரம் கையிலுள்ளவர்கள் தர்மத்தை, சாஸ்திரத்தை, குலப்பழக்கங்களை மதிப்பதில்லை!! இவர்களுக்கு உடலுக்கும், பொருளுக்கும் தீமை ஏற்படுமே எண்ற பயம் மட்டுமே பெரும்பாலும் இவர்களுக்கு.’’ என்பதோடு!!

‘’அதர்மாபி பவாத்க்கிருஸ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய
ஸ்த்ரீஷீ துஷ்டாஸி வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர’’ (பகவத்கீதை- பாகம்- 1-41)

‘’கிருஸ்ணா! அதர்மம் அதிகமாகப் பெருகுவதால் குலப் பெண்கள் நடத்தை கெட்டுப் போவார்கள் மேலும், மேலும் வார்ஷணேயப் பெண்கள் நடத்தை கெட்டுப் போனால் வர்ணக்கலப்பு உண்டாகிவிடும்’’

என்ற சூத்திரமே அர்சுனன் போருக்கு மறுத்த பிரதானமான காரணியாகும்.
இதன் தார்ப்பரியம் என்னவெனில்.  எமது சத்ரிய மன்னர்களின் மரணத்தால் குலதர்மம் அழிந்துவிட்டால் ஆண்களும், பெண்களும் குல மரியாதைக்கும், சமூக மரியாதைக்கும் கட்டுப்படாமல் நடத்தை கெட்டுப்போவார்கள். இதனால் பாவம் மேலும் வளர்ந்து சமூதாயம் முழுவதும் பரவிவிடும்! எங்கும் பாவம் பரவிவிடுவதால் சமூதாயத்திலுள்ள பெண்கள், ஆண்களுக்கு  எந்தக் கட்டுப்பாடும் புரியாது. இந்த நிலையில் சமுதாதாய தர்மத்தைக் காப்பாற்றும் ஆதாரமான ‘ஸதி’ தர்மம் அழிந்துவிடும்.

‘ஸதி’ தர்மத்தின் பெருமையை இழந்த பிறகு பரிசுத்தமான குடும்பத்துப் பெண்கள் வெறுக்கத்தக்க விபச்சார தோஷத்திற்கு ஆளாவார்கள.; பல சாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டுவிடும். தாய், தந்தையர் சாதி மாறுபட்ட ஆளாகிவிடுவார்கள். இப்படிக் குலத்தின் பரம்பரையாக வந்த புனிதத் தன்மை முழுவதும் எளிதாக நாசமாகிவிடும்…
என்ற மேற்கூறிய காரணமே மனைமரத்திலும் அதிக உயரமுள்ள காண்டீவம் அர்சுணன் கையிலிருந்து வழுவி, நழுவிப்போனது. தனது இரத்த உறவுகளைக் கொல்லப்போகிறோமே என்ற அவரது அச்சமானது உயிர்கள் மீதான கருணையினாலல்ல. தமது ‘ஸதி’ தர்மப் புனிதம் இழந்துவிடுமே என்ற அச்சமே..

   மேற்படியான இந்தக் கீதைத் தத்துவமே பின்வரும் கொடூர நிகழ்விற்கு காரணமாயமைந்தது.
‘ஸதி’ வழக்கம் இறந்து விட்ட கணவனின் சிதையில் உயிரோடு எரிக்கும் ‘ஸதி’ என்ற வழக்கம்தான் இந்து சமூக வழக்கத்தின் மிகக் கொடூரமானதாகவும், வெறுப்பூட்டுவதாகவும் இருந்தது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இக்கொடூர வழக்கம் பரவியது. கீதை இயற்றப்பட்ட காலத்திற்குப் பிந்தைய இந்து சாத்திரங்கள் அனைத்தும் ஸதியில் பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவதை புண்ணியமான, புனிதமான காரியமாக வெட்கமின்றி உயர்த்திப் பேசின.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் காஷ்மீர் பகுதியில் ஸதியில் ஏராளமான பெண்கள் எரிக்கப்பட்டதாக கல்கண்ணன் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். ஸதி வழக்கத்தை எதிர்த்த முற்போக்காளர்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள். பிந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த ‘ஸநாதன’ ( வம்ச பரம்பரையாக வழிவந்த நன்னநடத்தைகளின் கட்டுப்பாடு ) இந்துத்துவ எழுத்தாளர்கள் ஸதியில் பெண்கள் எரிக்கப்படும் காட்சிகளை உள்ளம் மகிழ்ந்து விபரித்திருக்கிறார்கள்.

கல்கத்தாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் 1803 ஆம் ஆண்டில 438 விதவைகள் எரிக்கப்பட்டதாக பிரிட்டிஸ் கவர்னர் ஜெனரல் வெல்லஸ்ஸி பிரபுவுக்கு, கிறிஸ்தவ பாதிரியாரான வில்லியம் கேரி எழுதியுள்ளார்.
ஆர் சி மஜிம்தார் கணக்குக் கூறுகிறார் ‘’கலகத்தாவிலும் அதன் அருகில் அமைந்த கிராமங்களிலும் 1815 ஆம் ஆண்டு 253, 1816 ஆம் ஆண்டு 289, 1817 ஆம் ஆண்டு 441 பெண்கள் ஸதிக கொடூரத்திற்கு உள்ளானார்கள்.
இறந்துவிட்ட தங்களது கணவன்மார் மீதான அன்பினாலும் இந்துத் தருமத்தின் மீதுள்ள பற்றுதலினாலும்தான் விதவைப் பெண்கள் எரியும் நெருப்பில் தாங்களாகவே ஏறிப்படுக்கிறார்கள் என்று இந்துத்துவத் தலைவர்களும், புரோகிதர்களும் நியாயம் கற்பித்தார்கள். இக்கூற்றில்  எவ்வித உண்மையும் இல்லை. கொலை பாதகம் குற்றமல்ல என்ற பகவத்கீதையின் கருத்தியலை கண்மூடித்தனமாக கடைப்பிடிக்கும் மனங்களின் விகாரத்தனமே அவர்களை இவ்வாறு கூறவைக்கிறது. மனிதம் எனும் உன்னத உணர்வு ‘மக்கிய’ மானுடப் பிசாசுகளாலேயே பிறர் துயரில் மனம் மகிழ்ந்து இக்கொடிய ஸதி வழக்கத்திற்கு@  புனிதம் கற்பிதப்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டும் வருகிறது.’’ என ஆர் சி மஜம்தார் அறிக்கை கூறுகிறது.

ஸதி நடைமுறைகள் பற்றி அறி;;க்கை தயாரித்து அளிக்குமாறு பிரிட்டிஸ் அராசாங்கத்தால் பணிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்பு கீழ்வங்காள காவல் துறைக் கண்காணிப்பாளரான திரு ஈவர் சான்றுகள் அழித்து இவ்வாறு கூறுகிறார். ‘’கணவனுடைய சிதையில் தன்னை எரித்து விடுவார்கள் என்று மின் வெட்டுப் போன்று ஒரே ஒரு கணத்தில் தோன்றும் அந்த முதல் நினைவுக் குறிப்பினால்  இயல்பாகத் திகிலடையும் அந்த கணவனை இழந்த பெண், முதலில் பதற்றமடைகிறாள். அடுத்ததாகச் சமூகம், உறவினர், மத தர்மம் ஆகியவற்றின் வற்புறுத்துதலினால், படிப்படியாக பதற்றத்தைத் தணித்து கொண்டு தயக்கத்துடன் தனது ஒப்புதலை தெரிவிக்கிறாள். கணவன் இழந்த அந்தத் துயரமான நேரத்தில் அவளை அரவணைத்து ஆறுதல் அளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் தோழமையுணர்வுள்ள யாரும் இல்லாத நிலை.

தருமத்தை நிலை நாட்டுவது என்ற பெயரில் பிணந்தின்னிக் கழுகுகளாக காத்திருக்கும் பார்ப்பன புரோகிதர்களையும், பிறர் துயரில் மனம் மகிழும் கயவர்களான உறவினர் கூட்டத்தினரையும் எதிர்ப்பதற்கு துணிவற்ற நிலையில் உள்ளம் சோர்ந்து போகிறாள். இது போன்று கொல்லப்படுவதை  எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். ஆனால் பசப்புரை, அச்சுறுத்தல் , ஏய்ப்பு ஆகிய அனைத்தையும் பயன்படுத்துவதோடு, இறுதியில் மத தர்மம் என்ற குருட்டு நம்பிக்கையையும் தூண்டிவிட்டு அந்தப்பெண்ணை இணங்க வைக்கிறார்கள். அவள் தனது கணவனோடு இறந்துவிட்டால் முழுக்குடும்பத்திற்கும் அது பெருமை சேர்க்கும் என்பதோடு, அவளும், அவளது கணவனும் எக்காலத்திற்கும் சொர்க்கத்தில் மகிழ்திருப்பார்கள் என்று நம்ப வைக்கப்படுகிறார்கள். பெண்கள் ஸதியில் எரியூட்டப்படும் விபரங்களை முழுமையாக அறிய நேரிடும் பகுத்தறிவுடைய எந்த மானிடரேனும் இந்து மதத்தைத் துறந்து மனம் உருகாது!! இருந்துவிட முடியாது. ஸதி என்ற பெயரில் பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவதை தடுக்காமல் சாஸ்திரங்கள் கூறுகிறது, கீதையில் ஓதப்பட்டுள்ளது என்று கூறி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.’’ என்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

வங்காளப் பகுதியுpலுள்ள நடைமுறைப்படி இறந்து உடல் அழுகிப்போன அந்தக் கணவனுடன் மனைவியை சேர்த்துக் கட்டியிருப்பார்கள். எரியூட்டும் பொழுது பிணத்துடன் சேர்த்துக் கட்டப்பட்ட கயிறு எரிந்து உயிருள்ள பெண் விடுபட்டுவிட்டால்!! இந்து தர்மம் எனனாவது!!! கீதை தர்மம் என்னாவது!! எனவே நீண்ட தடிகளுடன் சிதையைச் சுற்றி நிற்கும் தடித்த மனங்கொண்ட மாமிச மலைகள் சுற்றி நின்று தீப்பிளம்பிற்குள் அப்பெண்ணை மீண்டும், மீண்டும் தடியால் தள்ளிவிட்டு இந்து தர்மத்தை நிறைவு செய்வர்.

மழைக்கால இரவொன்றில் கட்டுக்களிலிருந்து விடுபட்ட ஒரு பெண் சிதையிலிருந்து தப்பிச்சென்று காட்டுப்புதரில் மறைந்து கொண்டாள். இந்து தர்மத்தை நிலை நாட்டுவதில் குறியாக இருந்தவர்கள் அவளைத்தேடிக் கண்டுபிடித்தனர்!! என்ன பரிதாபம், இதை எந்த சோகத்தில் இணைப்பது, இதை எப்படிக்கூறி புரியவைப்பது!! அவளது சொந்த மகனே அவளை இழுத்து வந்தான்!! அவளோ விட்டு விடும்படி அழுதாள், மன்றாடினாள், உன்னைப் பெற்றவள் என்றாள்! புலம்பினாள்…!! இந்து தர்மம் என்னாவது!! மீண்டும் நெருப்பில் எறியப்பட்டாள், எரியூட்டப்பட்டாள்.

ஓர் இந்திய சமஸ்தானத்தின் மகாராஜா செத்துத் தொலைந்தவுடன் அவனது சிதையில் எவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் உயிருடன் எரிக்கப்படுகிறார்களோ அதுதான் அவன் உயிரோடு வாழ்ந்த காலத்தின் சிறப்பு என்று மதிக்கப்பட்டது. 1780 ஆம் ஆண்டு புரூண்டி மகாராஜா பூட்டாசிங் இறந்தவுடன் 84 பெண்கள் எரியூட்டப்பட்டனர். ஜோத் பூர் மகாராஜாவின் சிதையில் 64 பெண்கள் எபியூட்டப்பட்டனர். வேறு சிறிய சமஸ்தான இராஜாக்கள் இறந்த போதெல்லாம் ஒவ்வொரு இராஜாவின் சிதையிலும் குறைந்தது 20 பெண்கள் எரியூட்டப்பட்டனர். பிரிட்டிஸ் அரசாங்கத்தால் ஸதி வழக்கம் தடை செய்யப்பட்ட பின்பும் கூட இடர் இராஜா இறந்தவுடன் அவனது சிதையில் ஏழுக்கும் மேற்பட்ட ராணிகளும், இரண்டு காமக் கிழத்திகளும் இரண்டு பணிப் பெண்களும் எரியூட்டப்பட்டனர். பஞ்சாபில் சீக்கியர் ஆட்சியில் சுதேத் சிங் இறந்தவுடன் அவனது 10 மனைவியரும் 300 காமக் கிழத்திகளும் எரியூட்டப்பட்டனர்.  முகலாய சாம்ராச்சியத்தில் ஸதி வழக்கத்திற்கும், குழந்தைத் திருமணங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. அவுரங்கசீப் சதியில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணை காப்பாற்றினார். இது இந்துத்துவத்திற்கான உரிமையெனில்!!! தனக்கும் தனது புனித நூலின் கட்டளைப்படி நடக்க உரிமையுண்டு எனக்கூறி இந்துத்துவ அடையாளங்களை அழித்தார். கி.பி 1707 இல் இறந்தார். முகலாய சாம்ராச்சியம் அழிந்தது.

பெண்கள் சிதையில் எரியூட்டும் வழக்கம்  இந்துக்களிடையே எந்த அளவுக்கு பரவியிருந்தது என்பதே, இந்து சமூகத்தின் தார்மீக நெறி எந்தளவுக்கு இழிநிலையில் இருந்தது என்பதற்கான அளவுகோலாகும். இதற்கு கீதை நாயகன் அர்சுனனின் ‘குலநாசக் கருத்தியலே’ அடிப்படைக் காரணியாக அமைந்தது.

1,பகவத்கீதை தமிழ் விரிவுரை

2, The Role of Bhagavad Gita in indian Histtory (premnath bazaz)



bagavathkeethai

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité