Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
MENU
thuuuu
Publicité
20 juin 2007

அய்யப்பனா? கையப்பனா? இல்லை பொய்யப்பனா?

பத்மாசூரன் என்பவன் ஒரு அசுரனாம், அவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் செய்தானாம். அவனது கடுமையான தவத்தால் கருணை கொண்ட சிவபெருமான் அவன் எதிரே தோன்றி ‘’பக்தா உ)னக்கு என்ன வரம் வேண்டும் வேண்டியவரத்தைக் கேள் ‘’ என்றாராம். பத்மாசூரன் சிவனைப்பார்த்து ‘’நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடவேண்டும். அப்படி ஒரு வரம் வேண்டும்’’ என்றான். ‘’அப்படியே வரம் தந்தேன் போ’’ என்றார் சிவபெருமான். ‘’சுவாமி நீங்கள் கொடுத்த வரம்  வேலை? செய்கிறதா அது பலிக்குமா? அதை எப்படி நான் சோதித்துப்பார்ப்பது எனவே நான் உங்கள் தலையிலேயே கை வைத்துப் பார்க்கப்போகிறேன்’’ என்றான் பத்மாசூரன். உடனே சிவபெருமானுக்குப் பயம் வந்துவிட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று உயிர்ப் பயம் காரணமாக ஓட ஆரம்பித்தார். பத்மாசூரன் விடவில்லை சிவபெருமானைத் துரத்தினான்.

நாம் அப்படி ஒரு வரத்தைக் கொடுத்தால், பக்தன் நம் தலையிலேயே கை வைப்பான் என்ற சாதாரண முன் யோசனை கூட இல்லாத சிவன் ஒரு கடவுளா? கதை இப்படியிருக்க கடவுள் முக்காலமும் உணர்ந்தவர், அவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்கிறது இந்து மதம்!!! இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் பார்த்தீர்களா!!! ஓட்டப்பந்தயம் ஓயவில்லை. தொடர்ந்து இருவரும் ஓடிக்கொண்டிருந்தனர். பத்மாசூரன் சிவனைத் தொட்டுவிடும் அளவுக்கு நெருங்கி விட்டதால் சிவனுடைய மைத்துனர் மகா விஷ்ணுவிற்கு « படக் படக் » என்று மனது அடித்துக் கொள்ள என்ன செய்வதென்று கலங்கினார், புலம்பினார். உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு அழகிய தேவதைபோல் வடிவெடுத்து பத்மாசூரனுக்கு எதிரில் வந்தார்.

பேரழகியைக் கண்ட பத்மாசூரன் அப்பேரழிகியை புணரும் வெறி கொண்டு ஓட்டத்தை நிறுத்தினான். அப்பேரழகியைப் புணரத் துடித்தான். தன் விருப்பத்தையும் அவளிடம் வெளியிட்டான். ‘’நீ சுத்தமாக இல்லை எங்கேயாவது சென்று குளித்து விட்டு வா’’ என்றார் பேரழகி வடிவிலுள்ள விஷ்ணு. பத்மாசூரன் தண்ணீரைத் தேடியலைந்தான். ஓரிடத்திலும் தண்ணீர் இல்லை ’’ பெண்ணே ஓரிடத்திலும் தண்ணீர் இல்லை. ஒரு சிறுகுழியில்தான் சிறிதளவு தண்ணீர் உள்ளது’’ என்றான் பத்மாசூரன். ’’அந்த நீரைத்தொட்டு தலையில் வைத்துக் கொண்டு வா ! பிறகு நீ என்னைப் புணரலாம்’’ என்றார் விஷ்ணு. பத்மாசூரன் காம மயக்கத்தால் அறிவை இழந்து தண்ணீருள்ள குழியை நோக்கி ஆவலாய் ஓடி அதிலுள்ள நீரைத் தொட்டு தலையில் வைத்தான். அவ்வளவுதான் அவனே எரிந்து சாம்பலானான்.

மகிழ்ச்சியடைந்த மகாவிஷ்ணு அழகிய பெண்வடிவத்தோடே சிவனருகில் செல்ல, சிவனுக்கு இப்ப ஆசை மூண்டு விட்டது பேரழகி வடிவத்திலுள்ள விஷ்ணுவை அவரும் புணரத் துடித்தார். அவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட மாகாவிஷ்ணு இப்ப ஓட ஆரம்பித்தார்.

அட சிவன் தான் அறிவுகெட்டவன் என்றால் அவன் மைத்துனன் அவனை விட அறிவுகெட்டவன் போலிருக்கு. சிவன் ஆசைப்படுகிறான் என்றதும் ஏன் ஓடத் தொடங்க வேண்டும். பெண்ணாய் மாறியவர் தனது சுயஉருவத்தைக் காட்டியிருந்தால் பாவம் சிவனுக்கும் தொல்லை நீங்கியிருக்குமே?  அந்தளவுக்குக்கூட கடவுளுக்கு அறிவு இல்லையா. இப்படி அறிவுகெட்ட, காம வெறிகொண்ட கடவுள்களால் மானிடருக்கு எப்படி பலன் கிடைக்கும். சிவனும் விடுவதாயில்லை துரத்திக் கொண்டே ஓடினான். மீண்டும் ஓட்ப்பந்தயம்!! ஓடுகின்ற ஆட்களிலும், ஓடுகின்ற நோக்கத்திலும்தான் மாறுபாடு! விஷ்ணு வெட்கத்தோடு ஓடினான். சிவபெருமான் காம வெறியோடு ஓடினான். வெட்கத்தை வெறி வென்றது. ஆம் மகாவிஷ்ணு கையை  சிவன் பிடித்தார். விவகாரம் என்ன செய்தாரோ நமக்குத் தெரியாது விளைவு என்ன தெரியுமா? அவர்களின் கையிலே ஒரு ஆண் குழந்தை பிறந்து விட்டது.

ஆம் இரு ஆண்களின் கைகளும் கலந்ததால், கரு அணுக்கள் இல்லாமல், கருத்தரிக்காமல் பத்துமாதம் சுமக்காமல் சுருக்கமான வழியில் கைகளுக்குள்ளால் குழந்தை பிறந்து விட்டது! அதாவது ஒரு ஆணின் கையை இன்னொரு ஆண் பிடித்த மாத்திரத்திலே குழந்தை பிறந்து விட்டது. அக்குழந்தைதான் அய்யப்பன்!! அதிசயமாய் இருக்கிறதா? அறிவிற்குப் பொருந்தவில்லையா? அவநம்பிக்கை தோன்றுகிறதா? அதற்குப் பெயர்தான் இந்துமதம். அய்யப்பன் கதை மட்டும் அதற்கென்ன  விதிவிலக்கா? அன்பர்களே இதுதான் அய்யப்பன் பிறந்த வரலாறு என இந்து மதம் நமக்கு கூறுகிறது.

கையினூடான பிறந்ததால் கையப்பன் என்ற பெயர் ஏற்பட்டு பின்னாளில் அப்பெயர் அய்யப்பனாக மாறியது.

அவன் கையப்பனுமில்லை, அய்யப்பனுமில்லை. வெறும் பொய்யப்பனேயாகும்.

Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité
Publicité