28 mars 2007
சாதி… இயற்கைக்கு முரணானது... பகுத்தறிவுக்கு
சாதி…
இயற்கைக்கு முரணானது...
பகுத்தறிவுக்கு ஒவ்வாதது...
சமத்துவத்திற்கு மாறானது...
பொதுவுரிமை, பொதுவுடைமை ஏற்காதது...
அன்பை முறிப்பது...
அறிவியலுக்கு எதிரானது...
வேற்றுமையை வளர்ப்பது...
மனித நேயத்திற்கு புறம்பானது...
பகைமையை ஏற்படுத்துவது...
ஒன்றிணைவைத் தடுப்பது...
மனிதரை மிருகமாக்குவது...
பொதுவான சட்டங்களுக்கு மதிப்பளிக்காதது...
சமூக அமைதியை சீர்குலைப்பது...
மனித உறவுகள் மேம்படத் தடையாக இருப்பது...
மனிதரை இழிவாக, கீழாக நடத்துவது...
மனிதரை வர்க்க வேறுபாட்டில் அடைப்பது...
ஆணாதிக்கத்தைப் பேணுவது...
மானுட ஓர்மையை சீர்குலைப்பது...
அடிப்படை மனித உரிமைகளை மறுப்பது...
சாதி….
(ஏபி. வள்ளிநாயகம்)
Publicité
Commentaires