Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
20 novembre 2006

இந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக

periyar

ந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள். அது ஒழிந்து நல்ல மக்களாக, நல்ல சமூதாயமாக ஆகவேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதைச் சொல்ல ஒருவரும் இல்லை. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒன்றைச் சொல்லி ஏமாற்றுவது தவிர வேறு இதைச் சொல்ல ஆளில்லை. அதுவும் இந்தக் காந்தி வந்த பிறகு மிகவும் மோசமாகிவிட்டது. நம்மை வட நாட்டானிடமும், பார்ப்பானிடமும் சிக்வைத்து மீளா அடிமையாக்கி விட்டுப் போய்விட்டார். நாம் எல்லோரும் நாலாம் சாதி, ஐந்தாம் சாதி மக்கள், தேவடியாள் மக்கள், சட்டப்படி, சாஸ்திரப்படி, புராண இதிகாசங்கள் படி! இது பற்றி யாருக்கும் கவலையில்லை. சட்டசபைக்குப் போகிறான். இன்று மந்திரியாய் (அமைச்சர்) இருப்பவர்கள் கீழ்ச்சாதிதானே? இந்த அவமானத்தைவிட மந்திரி வேலை பெரிதா என்ற எண்ணம் வருவதில்லை ஏன் அடிமைகளாக, கீழ்ச்சாதி மக்களாக இருக்க வேண்டும்? சிந்திக்க வேண்டும் உலகத்தில் எங்காவது இருக்கா? எனக்குப் பின்னால் பெட்டி தூக்கி நின்றவர்கள் எல்லோரும் சட்டசபைக்கு ஓடிவிட்டார்கள். இதுவரை எங்களைத்தவிர யார் கேட்கிறார்கள்.

1920 முதல் என் பிழைப்பை விட்டுவிட்டு, வியாபாரத்தை விட்டுவி;ட்டுவந்து சந்நியாசிபோல் ஆனேன். துரோகத்தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பவர்களையும் கண்டேன். நான் பாடுபட்டு ஏதோ ஓரளவு உணர்ச்சி மக்களுக்கு வந்துள்ளது! இது எத்தனை நாளுக்கு நிற்கும்? நான் தலை சாய்ந்தால் தீர்ந்தது!

நான்தான் ‘’பிள்ளையாரை உடை, ராமன் படத்தை எரி, கொடியைக் கொழுத்து’’ என்கிறேன். இதைக் கேட்டதும் மற்றவனுக்கு வயிற்றுப் போக்கு வருகிறது. நேருவுக்கு கொடும்பாவி கட்டு, காந்தியைக் கொழுத்து என்றால் 3 வருடம் சிறை என்றாலும் போகத் தாயாராகத்தான் சொல்கிறோம். காந்தி நம்மை பார்ப்பானுக்கும் வட நாட்டானுக்கும் காட்டிக் கொடுத்தாரா இல்லையா? இதைச் சிந்தித்துவிட்டு ஆத்திரப்படுங்கள். நாங்கள் சிறைக்குப் போகிறோம், நாங்கள் தூக்கு மேடைக்குப் போகிறோம், நீங்கள் காட்டிக் கொடுக்காமல்  இருந்தால் போதும். எங்கள் காலத்திலேயே பார்ப்பான் சித்திரத்தில்கூட (படத்தில்) இல்லாதபடி ஒழித்தாக வேண்டும்.

நம் மக்கள் அறிவு பெறவேண்டும், நம் பெண்களைச்  சினிமாவுக்கு அழைத்து போவதையும், கோவிலுக்கு அழைத்துப் போவதையும் தவிர அறிவு சாதனத்திற்கு என்ன செய்கிறோம்? பெரிய புலவர் என்பவரெல்லாரும் கூட மனைவியைப பெட்டியில் வைத்துப் பூட்டுகிறானே தவிர, அறிவுத் துறையில் என்ன அனுபவம் அவர்கட்கு? இன்று உலகத்தில் எவ்வளவு விஞ்ஞான சாதனங்கள் கண்டு பிடித்துள்ளார்கள்! மேல் நாட்டில்  இவைகளை எப்படிச் செய்தான்? ஜபம் செய்தா? தபம் செய்தா? நாம் எப்படி இருக்கிறோம்? குழவிக்கல்லை கும்பிட்டு, சாணியைக் கரைத்துக் கொடுத்தால் குடித்துவிட்டு, கன்னத்தில் போட்டுக் கொள்கிறானே! இந்த மூட நம்பிக்கை ஒழிந்து மற்ற நாட்டு மக்கள் போல அறிவுபெற வேண்டாமா? இதைச் சொல்ல யார் ஆள்?

எனக்கும் அவர்களைப்போல சட்டசபைக்கு போவதனால் கிடைக்காதா? மந்திரியாக வேண்டுமானால் கிடைக்காதா? இல்லை காசு சேர்க்க வேண்டுமா? இருப்பதை என்ன செய்வது என்பதே என் கவலை. இல்லை எனக்கு மந்திரியாகி பெருமை வரவேண்டுமா? ஏதோ இருக்கிறவரையில் 2000 வருடமாக யாரும் கவலைப்படாத ஒரு காரியத்தை செய்து விட்டுப்போகலாம் என்றுதானே இந்தப் பட்டி தொட்டியெல்லாம் சுற்றுகிறேன். அதைத்தவிர வேறு என்ன?

பார்ப்பானை இவ்வளுவு திட்டுகிறேனே எவன் எனக்கு விரோதி? ஏன் இப்படிப் போசிக்கோண்டிருக்கிறேன்? எல்லோரைப் போலவும் ஆகா-பகவான்-என்று சொல்லிச் சுகமாக இருக்க முடியாதா? என்ன இருந்தாலும் பெரியார் பெரியார்தான் என்று பார்பபனன் சொல்கிறபடி நடக்க முடியாதா? எதற்கு இப்படிப் பேசுகிறேன்?  நீங்கள் சிந்திக்க வேண்டும். அடுத்த காரியம் மூட நம்பிக்கை ஒழியவேண்டும் மக்கள்  அறிவு பெறவேண்டும் என்பது. அதற்கு அடுத்த காரியம் வகுப்புவாரி உத்தியோகம் கிடைக்க வேண்டும். இப்போது சாதி
ஒழியவேண்டும் என்பதை முக்கிய காரியமாகக்கொண்டு வேலை செய்கிறோம். இந்த நாட்டில் சாதியின் காரணமாகப் பார்ப்பான் 100க்கு 100பேர் ஒடடுக் குஞ்சு (சிறு குழந்தை) உட்பட படித்திருக்கிறான்.பார்ப்பான்-பிராமணன் என்ற ஓரே காரணத்தால்! வரி கொடுக்கும் நாம் காமராசர் போல முதல் மந்திரி வந்து 100க்கு 18பேர் படித்துள்ளோம். காரணம் மனுதர்மபப்படி சூத்திரன் படிக்கக்கூடாது. காங்கிரஸ் மக்களுக்குப் பிரதிநிதி ஸ்தாபனம் என்கிறார்களே அது உண்மையானால் எல்லோருமல்லவா படித்திருக்க வேண்டும்? பார்ப்பானே படிப்பது ஏன்? காங்கிரஸ் மக்களுக்கு பிரதிநிதி ஸ்தாபனமா அல்லது பார்ப்பானுக்கு பிரதிநிதி ஸ்தாபனமா? நம் மக்களுக்கு மூளையில்லையா?  100க்கு 3பேர்தானே பார்ப்பான் அவன் 6,7 பேர் அய்க்கோர்ட்  ஜட்ஜாக (உயர்நீதி மன்ற நீதிபதியாக) இருக்கிறான்? கணக்குப்படி 15 ஜட்ஜுக்கு (நீபதிகளுக்கு) அவன் 1அரை பேர்தானே இருக்கலாம்? இவ்வளவு நாளைக்கு நாங்கள் கிளர்ச்சி செய்தபிறகு இப்போதுதான்  தமிழர்கள் வந்தார்கள்.

ஏன்? மனுதர்மத்தில் சூத்திரன் நீபதியாக வரக்கூடாது என்று இருக்கிறது? காமராசர் வந்த பிறகு பல பேர் தமிழர்கள் வந்தார்கள். நேற்றுகூட அய்க்கோர்ட் ஜட்ஜ் இரண்டுபேரை தமிழர்களில் நியமித்தார். வைத்திய இலாகாவில் (மருத்துவத் துறையில்) ஒருவரை நியமித்தார். இதற்கு தமிழன் வருவதா? அவனை உருபட விடுவதா என்று அவன் லஞ்சம் வாங்கினான் அங்கு படுத்திருந்தான், இங்கு கொட்டாவி விட்டான் என்று நம்மவனே ஒழித்துக்கட்டப் பார்க்கிறானே? அவ்வளவு துரோகம்! நம் இனத்தையே காட்டிக்கொடுத்து உயிர் வளர்க்க வேண்டிய கீழான நிலைக்கு நாம் இருக்கிறோம்.

ஊரில் எவ்வளவு பஞ்சம் வந்தாலும் பாட்டாளி மக்கள்தான் சோற்றுக்குக் கஞ்சிக்குத் திண்டாட வேண்டும்,
பார்ப்பான் தலை வாழையில் பச்சரிச் சோறு நெய் போட்டுச் சாப்பிடுகிறான். பார்ப்பான் என்ன பாடுபடுகிறான்? கோவணம் கட்டத்தெரியாத பார்ப்பார பையன் ஒரு கிழவனைப் பார்த்து டேய் என்கிறானே ஏன்? யார் சிந்தித்தார்கள்? நான் போனால் எனக்குப்பிறகு ஏன் பார்ப்பான் என்று கேட்க ஆளிருக்காது! கேட்கிறானே இப்போதே! பார்ப்பான் எங்கே போவான் என்கிறானே அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி காப்பி விற்பவன் ஏன் பிராமணன் என்று போட்டுக்கோள்கிறான்? என்று கேட்கிறோம். இது சின்ன காரியம் இதற்கு 600 பேரை தண்டித்திருக்கிறானே!

பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ள மனு போட்டால் அதில் ‘’அய்யா, நான் பார்ப்பனரல்லாதவன், எனக்கு ஒன்று கொடு’’ என்று கேட்டால், அதிகாரியின் மனதைக் கெடுக்கிறாய், போடாதே என்கிறானே? அப்படி இருக்கும்போது ஓட்டலில் உன்னிடம் அனுமதி வாங்கி காப்பி விற்பவன் ஏன் பிராமணன் என்று போட அனுமதிக்கிறாய் என்றால் வகுப்பு துவேஷம் என்கிறானே! இந்த மந்திரி மீது தப்பில்லை. அரசமைப்புச் சட்டம் அப்படி உள்ளது. அதைத்தான் முதலில் கொழுத்தப் போகிறேன்.

காந்தி ‘’வருணாசிரம தர்ம ராஜ்யம்’’ தான் நான் கேட்கும் சுஜராஜ்ஜியம் (தனி ஆட்சி) என்றார். அதை வைத்து இந்தச் சட்டம் செய்துகொண்டான். சட்டம் செய்து கொண்டு பிறகு ஓட்டுக் கொடுத்தான். ஆகவே சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது கிளர்ச்சி வந்தால்தால்தான் முடியும். இன்னும் பத்து தினத்தில் அரசமைப்புச் சட்டத்தை கொழுத்தச் சொல்லப் போகிறேன். அதைக் கொழுத்தியும் மாறவில்லையா அடுத்து காந்தி படத்திற்கு ‘நெருப்பு வை’ என்று சொல்லப் போகிறேன். அதற்கும் முடியவில்லை என்றால் காந்தி சிலையை அகற்று என்று சொல்லப் போகிறேன். அதற்கும் முடியவில்லை என்றால் நேருவை ஒரு கை பார்க்கிறோம். அதிலும் நடக்க வில்லையானால் கடைசியில் கத்தி எடுத்துக் கொள்க என்கிற அளவு வரவேண்டும்.

காரியமில்லாமல் முதுகுளத்தூரில் (சாதிக் கலவரம் ஒன்று நிகழ்ந்த இடம் (அசுரா) ) இப்போது பைத்த்தியக் காரத்தனமாகச் சாகிறானே! எதிரே ‘’ஏன்டா நீ பார்ப்பான்’’ என்று வருகிற பார்ப்பானை குத்துவது? நம்மில் ஆயிரம் பேர் தூக்குகளுக்குப் போவது? நேற்று ரயில் விழுந்து செத்தவன் எத்தனை பேர்? புயல் வந்தது, எத்தனை பேர் செத்தான்! அதுபோல ஒழியட்டுமே! பத்து பார்ப்பான், நம்மில் இரண்டு பேர், என்ன நட்டம் நமது பிள்ளை குட்டிகளாவது மனிதனாக இருக்கட்டுமே. பார்ப்பான், தானே வந்து நான் போகிறேன் என்பான்? நீயல்லவா ஏன்டா என்று கேட்க வேண்டும்? முதுகுளத்தூர் போல இரண்டு ஊரில் நடந்தால் போதும், செய்கிறோம் என்று தேதி கொடுத்தால் போதுமே! ஓடி விடுவானே! நான் கிழவர்களைப் பார்த்துச் சொல்லவில்லை, சட்டசபைக்குப் போகிறவனைப் பார்த்துச் சொல்லவில்லை, பொதுவாழ்வின் பெயரால் வயிறு வளர்ப்பவனைப் பார்த்துச் சொல்லவில்லை. பாட்டாளிகளை, இளைஞர்களைப் பார்த்துச் சொல்கிறேன்.

சாதி ஒழியவேண்டும் என்பதற்கு நேருவுக்குக் கொடும்பாவி கட்டாமல், காந்தி படத்தை எரிக்காமல், சாதியை ஒழிக்க யாராவது வழி சொல்லட்டும் கேட்கிறேன்.

(27-9-157 செந்தூரில் தந்தை பெரியார் முழங்கியது பெரியார் களஞ்சியம் 10)

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité