Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
15 octobre 2006

2007 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய தகவல் குறிப்பு

election

  2007ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பிரான்சில் ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது. பிரான்சில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களானது மிகவும் வரவேற்க படவேண்டிய விடயமாகும். குறிப்பாக கட்சிகளுக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இடையிலேயான உறவுகளானது ஒரு புதிய பரிமாணத்தை கோரி நிற்கிறது. நான் அறிந்தவரை இங்கிருந்தே, அதாவது, பிரான்சிலிருந்தே  அந்நிகழ்வு தொடங்குகிறது எனவும் அறிகிறேன்.

  பிரான்சிலுள்ள அரசியல் கட்சிகளுக்குள் அதன் அங்கத்தவர்களின் செயல்பாடுகளானது, அவர்கள் கட்சி சார்ந்த முடிவுகளாக இல்லாமல் ஒவ்வொரு அங்கத்தவர்களும் தாங்கள் விரும்புகிற அல்லது தாங்கள் நம்புகிற கொள்கைகளை முன்வைப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதானமான ஜனநாயகக் கட்சிகளான பிரான்சின் சோசலிசக் கட்சியும், வலது சாரிக் கட்சியான யு, எம், பி கட்சியும், அதன் அங்கத்தவர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஊடாக இது வரை காலமாக பேசிவந்த வலது சாரி,  இடது சாரி,  எனும் கோட்பாட்டு; வேற்றுமைகளிலுள்ள பாரிய வேறுபாடுகளை, இரு சாரார்களிடமிருந்துமே  காணமுடியாத தோற்றம் நிலவுகிறது. கட்சிகள் என்பது வெறும் அடையாளம் மட்டுமாகவே தரித்துப் போய்யுள்ளது.

  _lecion_president

            

‘எமது நலன்கள் யாவும் கட்சியின் நலன்களுக்குள் கட்டுப்பட்டே இருக்கவேண்டுமென எமது ஆசான் (….)  சொன்னார்’ என்ற குரல் பிரான்சின் அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை அவை அர்த்தம் இழந்த ஒன்றாக உருகி கரைந்து போகிறதைக் காணக் கூடியதாயுள்ளது. இதற்கான ஆதாரமாக பிரான்சின் சோசலிசக்கட்சிக்குள் நிகழ்ந்த மாற்றத்தை ஓர் உதாரணமாக நாம் கண்டு கொள்ளலாம். வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக நியமனம் பெறுவதற்கு சோசலிசக் கட்சியிலுள்ள பலர் தமது விருப்பத்தை தெரிவித்தனர். அதில் மூவர் பிரதானமான கட்சியின் மூத்த உறுப்பினர்களாகவும், அரசியல், பொருளாதார புலமைபெற்றவர்களாகவும் இருந்தனர். LAURANT BABIUS இவர் முன்பு சபாநயகராக பணியாற்றியவர். DOMINIQUE STRAUS-HAHAN  இவர் முன்பு நிதி அமைச்சராக பணியாற்றியவர். SEGOLEN ROYAL  (பெண்மணி)  இவர் தற்போது பிரான்சின் மாகாணம் ஒன்றின் முதல்வராக பணிபுரிகிறார். மேற்படி மூவருமே வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் பங்கு கொள்ளப் போவதாக பகிரங்கமாகவும் கூறிவந்தனர். இவ்விடயத்தில் சோசலிசக் கட்சியானது தனிமனித விருப்பின் ஜனநாயகத் தன்மைக்கும், கட்சி அரசியலு க்குள்ளும் ஓர் புதிய வழிமுறையை  நிலைநாட்டியுள்ளது. இதையே புதிய பரிமாணக் கோரிக்கை என முன்பு குறிப்பிட்டேன். இந்த மூவருமே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வௌவேறு கொள்கைகளை முன்வைப்பவர்களாகவும் இருந்தனர். எனவே இவர்களை அவர்களது கொள்கைகளை  விவாதத்துக் குள்ளாக்கும் சாதுரியங்களையும், ஒரு கேள்விக்கான பதிலை மூவரும் வௌவேறு விதமாக பதில்கள் அளிப்பதையும் பல தடவைகள் பகிரங்கமாக தொலைக் காட்சியின் ஊடாக  காண்பிப்பதன் ஊடாக,  ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் முடிவை கட்சி அங்கத்தவர்களின் தீர்மானத்திற்கு விடப்பட்டது.  இதன்படி உட்கட்சித் தேர்தல் நடாத்தப்பட்டு முதல் சுற்றிலேயே 60,62 வீதமான வாக்குகளைப் பெற்று SEGOLEN ROYAL தெரிவு செய்யப்பட்டார். இதில் ஒரு இலட்சத்து எழுபத்தி எண்ணாயிரம் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கு கொண்டிருந்தனர்.

_lecion_president 

இவ்வாறான வேட்பாளர்களுக்கான முரண்பாட்டு போட்டிகள் பிரான்சின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கட்சியான யு. எம். பி கட்சிக்குள்ளும் நிலவியது. அவை கட்சி அதிகாரத்தின் மூலமாக மறைக்கப்பட்டது.அவர்களில் மூவர் பிரதானமானவர்கள். MICHELLE ALLIOT-MARIE(பெண்மணி வயது 60) தற்போதைய பாது காப்பு அமைச்சர். NICOLA SARKOZY  (வயது51) தற்போதைய உள்துறை அமைச்சர். DOMINIQUE DE VILLEPIN (வயது 52) தற்போதைய பிரான்சின் பிரதமர். இவர்களில் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரான பெண்மணியும் உள்துறை அமைச்சரான நிக்கோலா சார்க்கோசியுடன் தொடர்ந்து முரண்படுபவர்களாகவே இருந்து வருகிறார்கள். தற்போது பாதுகாப்பு அமைச்சாரான மிஷல் அலியோ மேரியே நிக்கோலா சார்க்கோசியுடன் அதிக முரண்படுபவராகக் காணப்படுகிறார்.  15-12-06 வெள்ளியன்று மேற்படி இருவருக்கும் இடையில் மிகப் பெரிதாக முறுகல் நிலை ஏற்பட்டது. லியோன் எனும் நகரில் யு. எம். பி கட்சியினால் மாகாண மட்டத்தில் நிகழ்த்தி வரும் தேர்தல் சம்மந்தமான விடயங்கள் குறித்த பகிரங்க விவாதத்திலேயே அவர்கள் இருவருக்குமான முறுகல் நிலை மேலும் விரிவடைந்துள்ளது. ‘’ பிரான்சைப் பொறுத்தவரை வெளிநாட்வர்களின் பார்வையானது EIFFEL ரவர் மீதும், பிரான்சின் ஜனாதிபதியான  YACQUES CIRAC என்பவர்  பிரான்சிற்கு கிடைத்த ’மனித அவதாரமாகவும்’  உள்ளது. ஆனால் எனது பார்வைக்கு பிரான்ஸ் நாடானது மிகவும் முன்னேற்றம் குறைந்து செல்வதாகவே தெரிகிறது. ஜனாதிபதி என்பவர் நாட்டின் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து அதை வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும்’’ என அவ்விவாதத்தில் பாது காப்பு அமைச்சரான அப்பெண்மணி கூறியதை தகங்க முடியாத அவமானமாக உள்துறை அமைச்சர் கருதினார் போலும் (இவரின் நடவடிக்கைகள் பல வற்றை கண்டு கொள்ளாதவர் தற்போதைய ஜனாதிபதி என்பது அக்கட்சிக் குள்ளவர்களின் மனக்கசப்பு ) ஏறிக் குதித்து நிலை தடுமாறிப் பேசத் தொடங்கினார். ’’ அறுபத்தி இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்டது பிரான்ஸ். பிரான்ஸ் மிகப்பெரிய மக்கள் சக்தி, அந்த மக்களின் உழைப்பே ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புகிறது. (இப்படி சொல்பவர்தான் தனது நண்பரும் தனது தேர்தலுக்கும் பயன்படப் போகிறவருமான பிரபலமிக்க பாடகரும், கோடீஸ்வரருமான ஒருவர்  இங்கு வருமானவரி கூடுதலாக கட்ட வேண்டியுள்ளதால் தான் சுவிஸ் நாட்டில் தஞ்சம் கோரப்போவதாக அறிவித்துள்ளதை பெரிதுபடுத்தாது அதற்கு அப்பாடகருக்காக நியாயம் வழங்குபவராகவும் மாறியுள்ளார்.  பின்பு அவர்பற்றிய தகவல் வருகிறது. (அசுரா) ) ஜனாதிபதியின் கடமை என்பது கட்சியின் மீது நடுவரா இருப்பதல்ல. ஜனாதிபதியின் பொறுப்பென்பது தண்ணீர் மீது நடக்கும் செயலுக்கு ஒப்பானது. ஜனாதிபதி என்பவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். ஜனாதிபதி என்பவர் மக்களுக்கான தலைவர். தான் நினைப்பதையும்

  என்ன செய்யப் போகிறேன் என்பதையும் மனவுறுதியுடன் முன்வைப்பவராக இருக்க வேண்டும். அவரே அனைத்துக்கும் பொறுப்பு மிக்கவர். அவர் அமைச்சர்-அவைக்கு பின்னாலோ பிரதம மந்திரிக்கு பின்னாலோ ஒழிந்து கொள்பவரல்ல.’’ தற்போதைய பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் கொம்பு சீவிவிடுகிற  வேலையாகவே உளதுறை அமைச்சரின் ஆவேசச் சொற்கள் பிரதிபலித்துள்ளது. (லூ மொன்ட் பத்திரிகை 15-12-06)

  என்னுமொரு வேட்பாளராக வரும் விருப்பம் கொண்டிருந்தவர். தற்போதைய பிரதம மந்திரியான  DOMINIQUE DE VILLEPIN (வயது 52) ஆகும். இவருக்கு இருந்த ஜனாதிபதி வேட்பாளராகும் ஆவல் பற்றி பல பத்திரிகைகள்? வானொலிகள்> தொலைக் காட்சிகள் அறிய விரும்பிய போதெல்லாம்> எனது சொந்த முடிவு முக்கியமல்ல கட்சியும்> கட்சி அங்கத்தவர்களுமே தீர்மானிப்பவர்கள் எனது தனிப்பட்ட விருப்பு என்று எதுவும் இல்லை என்று மிகப் பெரிய பொய்யை சொல்லிவந்தார். இவரது கட்சியும் சோசலிசக் கட்சியின் நடவடிக்கையைப் போல் தங்களது விருப்பத்தைக்கூறி பகிரங்கமாகவே தங்களது விருப்பங்களை> கொள்கைகளைத் தெருவித்து கட்சி உறுப்பினர்களால் ஒருவர் வேட்பாளாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் பிரான்ஸ் நாட்டில் பன்மைத்துவ தன்மைகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பானது மேலும் செழித்திருக்கும்.

பிரான்சின் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம்

தமது ஒரு இலட்சம் அங்கத்தவர்கள் மத்தியில் கட்சியின் சார்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்ததில், பிரான்சின் கொம்யூனிஸ்ட் கட்சி தமது அங்கத்தவர்கள் மத்தியில் பல சிக்கல்களை எதிர் நோக்கி இருந்தது. உட்கட்சித் தேர்தல் மூலமாக 55 வீத வாக்குககளை பெற்ற கட்சியின் பொதுச் செயலாளரான  MARIE-GEORGE BUFFET(பெண்மணி வயது 57) அவர்களையே வேட்பாளராக தெரிவி செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான அரசியல் கோட்பாடான ‘’ தாராளவாத எதிர்ப்பை ‘’ இத்தேர்தலில் முன்வைப்பதா இல்லையா என்பதே கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் எதிர்நோக்கிய பாரிய சிக்கலாக இருந்துது. இறுதியில் ‘தாராளவாத எதிர்ப்பை’ கைவிட்டு நாடு எதிர்நோக்கியுள்ள பொதுவான பிரச்சனைகளை தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய அம்சமாக இணைத்துக் கொள்வதென கட்சி தீர்மானித்தது.இதன் விளைவாக கட்சியின் தீவிரமான தாராளவாத எதிர்ப்புணர்வுக் கொள்கையுடைய ஆறு கட்சி உறுப்பினர்கள்  "C'est suicidaire pour le PCF qui va se trouver isolé et sera tenu pour responsable de cette situation",  ‘’பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியை தற்கொலை செய்தவர்கள் தனிமைப்படுவதோடு இவ்வாறான கட்சியின் நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டியவர்கள் ‘’ (LEMONDE  16-12-2006) எனக்கூறி கட்யிலிருந்து இராஜினாமா செய்தனர்.

முன்பு நினைவூட்டிய பிரான்சிலுள்ள பிரபல பாடகருக்கும் உள்துறை அமைச்சருக்குமான உறவுபற்றியது  JOHNNY HALYDAY என்பவர் பிரான்சிலுள்ள பாடகர்களில் மிகப் பிரபல்யமானவர், இலட்சக்கணக்கான இரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர். இவர் 14-12-2006 வியாழக்கிழமை அன்று  EUROPE 1 எனும் வானொலிக்கு அளித்த பேட்டியொன்று பிரான்சின் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி பாடகர் முன்பு பெல்ஜியம் நாட்டுப் பிரஜா உரிமை கேட்டு விண்ணப்பித்தவர். அதன் தமதத்தாலோ என்னவோ தற்போது தான் சுவிஸ் நாட்டில் தஞ்சம் கேட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வருடத்தில் பாதிக்காலம் சுவிசிலுள்ள பனிச்சறுக்குப் பிரதேசம் ஒன்றுக்கு சென்று தங்குவது தனது  அமைதிக்கும்  ஓய்வுக்கும் எனக் கூறிவருபவர்!!!  மிகப் பெரிய கோடீஸ்வரர்!!! அங்கு சென்று நிரந்தரமாக வாசிப்பதற்கான அப்பாடகர் கூறும் காரணம்.  qu'il en avait "marre, comme beaucoup de Français, de payer ce qu'on nous impose comme impôts". (பிரான்சிலுள்ள பலரைப்போல் எனக்கும் மிக உபத்திரமாக இருக்கு பிரான்சில் வாழ்வதற்கு. மிக வற்புறுத்தப்படுகிறது வருமானவரி கட்டும்படி) இதுதான் இவருக்கு பிரான்சில் வசிப்பதற்கு இடையூறாக இருப்பது. இது பற்றி இவரது நண்பரான, வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடயிருக்கும் உள்துறை அமைச்சரான நிக்கோலா சார்க்கோசியிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டபோது. அப்பாடகருக்கு வக்காலத்து வாங்குகிறார் இப்படியாக.  que le départ de Johnny Hallyday en Suisse prouvait qu'il y avait un problème en France. (யொனி ஹாலிடே இன் சுவிஸ் நாட்டுக்கு புலம் பெயரும முடிவானது பிரான்சில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை புலப்படுத்துவதற்கு ஆதாரமாக இருக்கிறது.) மேலும் உரைக்கிறார். ‘’நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.  நாட்டில் வாழும் கலைஞர்கள், படைப்பாளிகள் போன்ற பலரும் கூறுகிறார்கள் தாம் பிரான்சை விட்டு வெளியேற வேண்டுமென்பதாக. ஆகவே இதிலிருந்து என்ன புரிகிறதெனில், பிரான்சில் ஒரு பிரச்சனை இருக்கு’’  (le monde 15/12/2006) 

குறிப்பிட்ட இப்பாடகரின் முடிவிற்கும் அதற்கு வக்காலத்து வாங்கிய உள்துறை அமைச்சருக்கும் எதிராக சோசலிச வேடபளார் உட்பட பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக சோசலிசக்கட்சியின் வேட்பாளரான செஹொலன் றோயல் மேற்படி பாடகர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதாக கூறியதோடல்லாமல், ‘’நாம் எப்படி சாதரணமக்களிடமிருந்து வருமான வரியை எதிர்பார்க்க முடியும். இவர்கள் யாருடைய ஆதரவில் கோடீஸ்வரர்களானார்கள், எந்த நாடு இவரது வளர்ச்சிக்கு காரணமாயிருந்தது என்பதை இவர் சிந்திக்க வேண்டாமா?’ என்பதாகவும் கேட்டுக்கொண்டார்.சோசலிசக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான செஹொலன் றோயல் அவர்களது  பிரதானமான தேர்தல் வாக்குறுதியானது மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வுகள் போதாமையால், மாகாணங்களுக்கு  vetoஅதிகாரத்தை பயன்படுத்தும் உருமை இருகக் வேண்டும் என்பதே. இவர் முதல் வராக உள்ள மாகாணத்திலுள்ளவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதற்கான மானியத் தொகைகளையும் வழங்கி வருகிறார். மேலும் வெளிவிவகாரக்கொள்கைளிலலும் அமரிக்க பயங்கர வாதத்தையும், இஸ்ரேலிய பயங்கரவாதத்தையும் கடுமையாகச் சாடி வருபவர். மாறாக உள்துறை அமைச்சாரான நிக்கோலா சார்க்கோசியோ அமரிக்க இஸ்ரேலிய கனவான்களின் செல்லப் பிள்ளையாக இருக்க விரும்புகிறவர். இவர் முன்பு நிதி அமைச்சராக இருந்தபோது அமெரிக்க விஜயமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பி கையோடு பாராளுமன்றத்தில் தனக்கு அமரிக்காவில் கிடைத்த மதிப்பையும், வரவேற்பையும்  இவ்வாறு விபரிக்கிறார். ‘’பிரான்சில்; எங்களது ஆட்சியில்தான் யூத மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டிருப்பாதாகவும், கடந்த சோசலிசக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் அந்நிலை இருக்கவில்லை என அமரிக்க மக்கள் கருதுகிறார்கள்’’ எனக்கூறி புளகாங்கிதம் அடைந்தவர்.

மேலும் அண்மையில் நிக்கோலாவின் புலம்பலொன்று

"Si je suis élu président de la République, plus personne ne sera obligé de dormir sur le trottoir d'ici à deux ans" : c'est l'engagement pris par Nicolas Sarkozy lundi soir lors d'un meeting dans les Ardennes. Le président de l'UMP a annoncé la construction de 700.000 logements en dix ans. Face aux "renoncements" et à la "capitulation sociale" de ces vingt-cinq dernières années, il a promis de faire en sorte que "tout redevienne possible".

('நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இரண்டு வருடத்தில யாருமே தெருவோரங்களில் உறங்கும் நிலை இருக்காது '  ஆர்தென் எனும் ஊரில் திங்கள் (19-12-06) நிகழ்ந்த கூட்ட மொன்றில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான தற்போதைய உள்துறை அமைச்சரின் இந்த உறுதிமொழியே இதுவாகும். யுஎம்பி கட்சித் தலைவர் முன்பு தெரிவித்தவர் என்னும் 10 வருடத்தில் ஏழு இலட்சம் வீடுகள் கட்டப்படும் என்று (யார் இந்தக் கட்சித்தலைவர்!!! உள்துறை அமைச்சர் 2 வருடத்தில் யாரும் தெருவில் வாழும் நிலை இருக்காது நான் ஜனாதிபதியால் வந்தால் என்று கூறுகிறார். ஆனால் முன்பு யுஎம்பி கட்சித் தலைவர் சொன்னவர் 10வருடம் தாமதாமாகும் ஏழு இலட்சம் வீடுகள் கட்டப்பட்டு அனைவருக்கும் வீடுகள் இல்லாக்குறை நீக்கப்படுவதற்கு என்று. அவ்வாறு கூறியவர் யாரென்று பெரிதா யோசிக்காதீர்கள் இருவருமே ஒருவர்தான். கட்சியின் தலைவரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் போட்டியிடும் உள்துறை அமைச்சரும் ஒருவர்தான (அசுரா).)

கடந்த 25 வருடங்களாக சமூகமே சரணடைந்த நிலையிலும், எல்லாம் இழந்த கைவிட்ட நிலையில்தான் சமூகம் இருந்தது. நிக்கோலா சார்க்கோசி வாக்குறுதி கொடுத்துள்ளார் மக்கள் எல்லா பிரச்சனைகளிலுமிருந்து வெளியேறி நல்ல நிலமைக்கு மக்களை கொண்டு வருவாரென.' உலகமெங்கும் தேர்தல் வாக்குறுதிகளில்தான் சமத்துவம் நிலவுகிறதோ கோதாரியிலபோக.   (RTL எனும் வானொலி இணையத்தில் பெறப்பட்டது.  http://www.rtl2007.) 

அதுமட்டுமல்ல மேற்படி நபர்தான் தங்களது கட்சி மாநாட்டில்  கூறினார், பிரான்சில் எம்மால்தான் அனைத்திற்கும் தீவுகாணமுடியும்(!!!) தவறினால் எவராலுமே அதைச்செய்ய முடியாது. எனக்கூறி நிக்கோலா சார்க்கோசி கொதிக்கவும்... என்ர அம்மே... கரவொலிகள் காதைப்பிளந்தது.

இம்முறை ஜனாதிபதி;த் தேர்தலின் இறுதிச் சுற்று நிக்கோலா சார்க்கோசிக்கும், மாடம் செஹொலன் றோயலுக்குமே நடைபெறும் என ஊகிக்கப் பட்டாலும் கடந்த முறையைப் போல வலது சாரிக் கட்சிக்கும், தீவிவிர வலது சாரிக் கட்சியான தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளரான லூ பென்னுக்கும்  இறுதிச் சுற்று நிகழ்ந்து விடுமோ எனும் அச்சமும் நிலவவே செய்கிறது. காரணம் தீவிர வலது சாரிக் கட்சியின் ஆதரவு வீகிதாசாரமானது கூடிக்கொண்டேதான் செல்கிறது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 33 வேட்பாளர்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஒவ்வொருதரும் 500 பிரமுகர்களின் (வி.ஐ.பி) உத்தரவாதக் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருக்கு கையொப்பம் இட்டவர் பிறருக்கு கையொப்பமிட முடியாது. 500 கையொப்பம் பெறமுடியாதவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது. கடந்த தேர்தலிலும் பல வேட்பாளர்கள்  கையொப்பம் பெறமுடியாது தேர்தலில் பங்கு பற்றும் வாய்ப்பை இழந்தனர். மேலும் போட்டியில் எவருக்கு 5வீத வாக்குளுக்கு மேலாக கிடைக்கிறதோ அவர் தேர்தலுக்காக தான் செலவு செய்த தொகையில் அரைப்பகுதியை அரசின் மானியமாகக் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

பிற கட்சி வேடபாளர்கள்

பிரான்சின் புரட்சிக் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரு. ஒலிவியே பெசன்செனோ வயது 32 இவர் தாமே 100 வீதமான இடது சாரிகளென கூறிவருபவர். கடந்த தேர்தலில் இவர் பெற்ற வாக்கு வீதம் 4,25.

தீவிர இடது சாரிக்கட்சியான தொழிலாளர் போராட்டக்கட்சியின் சார்பில் திருமதி ஆர்லத் லகுய் வயது 66 கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வீதம் 5,72.

வலது சாரிக்கட்சியான தேசியக் குடியரசு இயக்கத்தின் சார்பில் திரு புறுனோ மேகிறே வயது 57 கடந்த தேர்தலில் இவர் பெற்ற வாக்கு வீதம் 2,34

மேலும் ஒரு வலது சாரிக்கட்சியான பிரான்சிற்கான அமைப்பு சார்பில் திரு பிலிப் து வியே வயது 57 கடந்த தேர்தலி; பெற்ற வாக்கு வீதம் 4, 74.

பிரதான வலது சாரிக்கட்சியான தேசிய முன்னணிக் கட்சியின் சார்பில் திரு யோன் மரி லூ பென் வயது 78 கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வீதம் 16, 86.

பிரஞ்சு ஜனநாயக அமைப்புக் கட்சியின் சார்பில் திரு. பிரான்சுவா பையறூ வயது 55 இவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வீதம் 6,84.

மேலும் கொம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திருமதி மேரி-ஜோர்ஜ் புவே வயது 57 புதியவர்

சோசலிசக் கட்சியின் வேட்பாளரான செஹொலன் றோயல் வயது 52 புதியவர்

வலது சாரிக் கட்சியான யு.எம் பி இன் வேட்பாளர் நிக்கோலா சார்க்கோசி வயது 51 புதியவர்.

தேர்தல் கால கள நிலமையும், முடிவுகளும்  அறிவிக்கப்படும்.

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité